Rock Fort Times
Online News

திருச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்….

இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வழங்கினார்...

திருச்சி வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜார்ஜ், பள்ளியின் தாளாளர் அருட்தந்தை இஞ்ஞாசி, முதுகலை ஆசிரியர் ராஜமாணிக்கம், திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, வட்டச் செயலாளர் இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார், மயில் குணா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்