ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். தெற்கு கோபுரம் வழியாக உள்ளே வந்த அவர் பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. வெங்கையா நாயுடு வுடன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.