Rock Fort Times
Online News

திருவெறும்பூர் அருகே தீ விபத்து:15- க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ரோடு பகுதியில் எண்ணற்ற கடைகளும், வணிக வளாகங்களும் அமைந்துள்ளது. இங்குள்ள பழைய ஆர்டிஓ சாலையில் பிளக்ஸ் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்தகடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ அருகில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளில் பரவியது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்