Rock Fort Times
Online News

ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு :திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்…!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், நீதிமன்றம் முன்பு மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் இன்று( 22-01-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் லட்சுமணன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கவுன்சிலர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மூத்த வழக்கறிஞர் வனஜா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிருபாகரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் விக்னேஷ், கோகுல், வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் அல்லூர் பிரபு, சுகன்யா, பிரவீனா, சிவபதி, சுப்பிரமணி , ப்ரியா அமர்த்தியா, கோட்டத் தலைவர் சம்சுதீன், நிர்வாகிகள் மல்லியம்பத்து தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்