திருச்சி மாநகரில் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் பல்வேறு இடங்களில் நேற்று நாள் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இரவு நேரங்களில் வான வேடிக்கைகளும் வைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் வைக்கப்பட்ட பட்டாசுகளால் சேர்ந்த குப்பைகள் மற்றும் இன்ன பிற குப்பைகள் என திருச்சி மாநகரில் ஒரே நாளில் 700 டன் குப்பைகள் சேர்ந்தது.
திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை 1723 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொள்வார்கள்.நாள்தோறும் சராசரியாக 370 முதல் 400 டன் வரை குப்பைகள் சேர்வது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 700 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 30 முதல் 35% வரை பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது.
வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் சேர்ந்துள்ளதால் இவற்றை அகற்றுவதற்கு இன்று கூடுதலாக 200 தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அவை தரம் பிடிக்கப்பட்டு உர கிடங்கிற்கு அனுப்பப்படும். அங்கு குப்பைகள் உரமாக மாற்றப்படும்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் காலை முதல் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகளை அகற்றுவதற்கு ஜேசிபி எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.