பராமரிப்புப் பணிகள் காரணமாக காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர் 5 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இ.பி. ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன . இதன் காரணமாக இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணி தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் சாலை, சின்னக்கடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த்சாலை, கீழஆண்டார்வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி. நகர், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் 5ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.