திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டும். காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாதா மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்காளக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் 15 – வது நாளான இன்று ( 11.08.2023 ) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் இது குறித்து முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது மேயா் அன்பழகன், அரசு அதிகாாிகள் உடன் இருந்தனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.