Rock Fort Times
Online News

திருச்சியில் திக்… திக்…எங்க மணல் குவாரிய மறிச்சிட்டீங்கல்ல… நீங்களா ? நானான்னு பார்த்துக்குவோம்…

மிரட்டல் ஆடியோவை கேளுங்கள்..! (ஆடியோ இணைப்பு)

அரசாங்கத்தின் நிதிநிலைமையை சமாளிக்கவும், வருவாயை அதிகரிக்கவும், மாநிலம் முழுவதும் 25 இடங்களில் மணல் குவாரிகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறையிடமிருந்து இதற்கான உத்தரவை பெற்று, தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் கொள்ளிடக்கரையோரம் உள்ள தாளக்குடி, மாதவ பெருமாள் கோவில் மற்றும் கூகூர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளி தமிழகம் மட்டுமல்லாது அருகிலுள்ள மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிது. இந்நிலையில், திருச்சி தாளக்குடி பகுதியில் இயங்கிவரும் எஸ்.ஆர் என்று அழைக்கப்படுகிற இராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல்குவாரியிலிருந்து, திருச்சியை சார்ந்த நவீன் ஜெயபால் என்பவர் மணல் வாங்கி, சிவகங்கை மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளார். வெளிமாவட்டங்களை சேர்ந்த லாரிகள் சிவகங்கை மாவட்டத்திற்குள் மணல் விற்கக்கூடாது எனக்கூறி, நவீன் ஜெயபாலின் லாரியை, அம்மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி லாரியை விடுவிக்கக்கோரி, திருச்சி தாளக்குடியில் இயங்கி வரும் குவாரியை முற்றுகையிட்டுட்டுள்ளார் ஜெயபால் . இதனால் ஆத்திரமடைந்த திருச்சி, கொள்ளிடக்கரை மணல் குவாரியின் மேனேஜர் சோழன் என்பவர், லாரி உரிமையாளர் நவீன் ஜெயபாலை போனில் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளார். அதில்., எங்கள் குவாரியை மறிச்சுட்டீங்கல்ல… தமிழ்நாட்டுல உங்க லாரி எங்கேயும் ஓடாது. நீங்களா ? நானான்னு பார்த்துக்குவோம் என்று பேசியுள்ளார்.

 

மேலும் திருச்சி தாளக்குடியில் செயல்படும் மணல் குவாரியில் 17,862 யூனிட் மணல் அள்ள மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது, ஆனால் அதைவிட அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதாவும், இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று ( 10.08.2023 ) சம்மந்தப்பட்ட குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், லாரி உரிமையாளரை குவாரி மேனேஜர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்