திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூன் 29) திங்கட்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். முகாமில், மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெய நிர்மலா , நகரப் பொறியாளர் அண்ணாதுரை, நகர்நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.