Rock Fort Times
Online News

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய-மாநில உயர்நிலைக் குழு கலைப்பு…!

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய – மாநில உறவுகள் மற்றும் கொள்கை விவகாரங்களை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.  3 பேர் கொண்ட இந்த குழு, மத்திய மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறு ஆய்வு செய்யவும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டதாக அப்போதைய திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய, மாநில உறவுகள் மற்றும் மாநில சட்டக்குழு பணிகளில் ஒத்ததன்மை இருப்பதால் இந்த குழு கலைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமபந்தபட்ட குழு, மாநில சட்ட ஆணையத்திடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தது. இந்நிலையில், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களை இனி மாநில சட்ட ஆணையமே நேரடியாகக் கவனிக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்