இந்திய கட்டுமான நிறுவனங்களின் சார்பில் திருச்சியில் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா…!
அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில், “பேர்புரோ 2024” என்ற தலைப்பில் வீடு மற்றும் வீட்டுமனைகள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. கண்காட்சி மற்றும் விற்பனை
மேளாவை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், கிடராய் அமைப்பு தலைவர் ரவி மற்றும் பேர்ப்ரோ கண்காட்சி தலைவர் மனோகரன், செயலாளர் நசுருதீன், திருச்சி கிடராய் செயலாளர் இளமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவில் குறைந்த விலையில் வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன.இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீடு மற்றும் மனைகளை பார்வையிட்டு தேர்வு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நாளை 11-08-2024( ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீடு மற்றும் வீட்டு மனைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்த கண்காட்சிக்கான அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.