Rock Fort Times
Online News

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையிலும், மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன் முன்னிலையிலும் இன்று(30-01-2024) நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு “மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம்”, “வாழ்க அண்ணல் காந்தியின் புகழ்” என்ற முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில், மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், சேர்மன் துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்