Rock Fort Times
Online News

இந்தியாவின் இரும்புப் பெண்மணி பிறந்த தினம்: இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புகழஞ்சலி…!

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 109 வது பிறந்த தினம், இன்று (19-11-2026) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி செலுத்தினர். அதன்படி, டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகர்ஜுன கார்கே மற்றும்
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்