கரூரில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், தமிழக சட்டமன்றத்தில் ‘பார்ட்டி பண்டு’ குறித்து பேசினாலே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து ஓடி விடுகிறார்கள். அடுத்த முறை சட்டமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது அனைத்து கதவுகளையும் இழுத்து மூட வேண்டும் போல இருக்கே என்று பேசினார். இந்நிலையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டம் ஒன்றில்
பேசுகையில், சட்டசபையில் எங்களை கோமாளி என நினைக்கிறாரா? சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் அவரது எலும்பை உடைத்துவிட்டு தான் அனுப்புவோம்” என்று மிரட்டல் தொனியில் பேசியிருந்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் வன்னியரசு பதிலடி,
திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே, திருச்செந்தூர் திமுக சட்டமன்ற
உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.