Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே வேன் மீது கார் பயங்கர மோதல்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்…!

தெலுங்கானா மாநிலம், வானபார்பி மாவட்டத்தைச் சேர்ந்த குழுவினர், ஒரு காரில் திருவண்ணாமலைக்கு சென்று சாமிதரிசனம் முடித்து விட்டு பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் இன்று(ஜூலை 20) திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் சென்ற போது முன்னால் நின்று கொண்டிருந்த வேனின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் பலத்த காயத்துடன்
கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்