திரிபுரா மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) இருந்த அமிதாப் ரஞ்சனுக்குப் பிறகு, அந்தப் பொறுப்புக்கு கடந்த மே 2025-ல் நியமிக்கப்பட்டவர் அனுராக் தன்கர். 1994-ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிபிஐ அதிகாரியாகவும், திரிபுரா மாநில புலனாய்வுப் பிரிவு தலைவராகவும் பணியாற்றியவர். மாநிலத்தின் மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக கருதப்பட்டார். இந்நிலையில், அகர்தலாவில் உள்ள காவல் தலைமையகத்தில் இன்று( ஜூலை 20) அவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டத் தகவலின்படி, அனுராக் தன்கர், தனது சொந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகக் கருதப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே சரியான காரணம் தெரியவரும்” என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தின் காவல்துறை தலைவர் ஒருவரே தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.