Rock Fort Times
Online News

இறந்தாலும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த சமையல் கலைஞர்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 43). சமையல் கலைஞரான இவர் நேற்று முன்தினம் இரவு துவரங்குறிச்சி பகுதியில் ஒரு திருமண விழாவில் சமைப்பதற்காக சென்று விட்டு மருதம்பட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் கார் மீது மோதியுள்ளது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ராசு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் நேற்று ( 04.09.2023 ) இரவு மூளைச் சாவு அடைந்தார். இது குறித்து ராசுவின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்ததோடு அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் மற்றவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று ஆலோசனை கூறினர். அவர்கள் இதற்கு சம்மதிக்கவே, ராசுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருதயம் சென்னைக்கும், நுரையீரல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், ஒரு கிட்னி மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி திருச்சி மருத்துவமனைக்கும், அனுப்பப்பட்டன. மேலும் இரண்டு கண்களும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். உறுப்பு தானம் வழங்க முன் வந்த ராசுவின் குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்