திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த கண்ணன், அவரது மனைவி சுபா ஆகியோர் பாலக்கரை எடத்தெரு, கீழகள்ளுக்காரத்தெருவில் பொன்மகள் எண்டர்பிரைசஸ் என்ற ஏலச்சீட்டு மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வந்தனர். இவர்கள் திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரிடம் தாங்கள் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என தங்க மகள் சேமிப்பு ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும், அந்த திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பிய சுந்தர்ராஜ் தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் 4 சீட்டுகளில் சேர்ந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 750 கட்டியுள்ளார். ஏலச்சீட்டு நடத்தி வந்த கண்ணன் இறந்து விட்டார். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு பெற்று பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சுந்தர்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்மகள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.