திருச்சி ரெயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நுழைய தடை…
ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. பயணிகளை அழைத்து செல்ல ரெயில் நிலைய வளாகத்திற்கு ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவு வந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று(06-09-2023) முதல் ஜங்சன் ரெயில் நிலைய முதன்மை நுழைவு வாயில் வழியாக ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக ரெயில்வே திருமண மண்டபம் அருகே உள்ள பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.