Rock Fort Times
Online News

திருச்சி: கிறிஸ்தவ பாதிரியார் மரணம்…

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் எசக்கியாள் கிருபை ராஜ் (வயது 35). இவர் வால்பாறை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார்.
சம்பவத்தன்று இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வயலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்