Rock Fort Times
Online News

திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..(படங்கள்)

தஞ்சையில் கலைஞர் நூற்றாண்றையொட்டி திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்று ( 06.10.2023 ) பாராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவா் மா. பிரதீப்குமாா் ஐஏஎஸ், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன், போலீஸ் கமிஷனா் என்.காமினி ஐபிஎஸ், மத்திய மண்டல ஐஜி காா்த்திகேயன் ஐபிஎஸ் , டிஐஜி பகலவன் ஐபிஎஸ் , மாவட்ட எஸ்.பி. வீ.வருண்குமாா் ஐபிஎஸ், மற்றும் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமாா், சவுந்தரபாண்டியன், கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி, கிழக்கு மாநகர செயலாளா் மதிவாணன், கழக நிா்வாகிகள் உள்பட ஏரளமான தொண்டா்கள் வரவேற்பளித்தனா்.

                                              தொண்டர்கள் பலரும் சாலை அணிவித்து வரவேற்பு வழங்கிய நிலையில் தொண்டர் ஒருவர் ஸ்டாலினுக்கு இருபது ரூபாய் மாலை அணிவித்தார்.தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களிடையே விமான நிலையத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று முதலமைச்சா் தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டார்.

                 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்