Rock Fort Times
Online News

இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று இரவு மீண்டும் காய்ச்சல் அதிகமானதை ஒட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்