திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை , அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் வனக்கோட்டத்தில் பணிபுரியும் வன அலுவலர்கள் மற்றும் வனக்காப்பாளர்களுக்கு முதற்கட்டமாக 20 நபர்களுக்கு இ- பைக் வழங்கினார். தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு நாற்றங்கால் உற்பத்தி , நடவு பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இ- பைக் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வனச்சரக அலுவலர் கோபிநாத் செய்திருந்தார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.