திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தஞ்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். முதல்வர் வருகையையொட்டி தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் முதல்வர் கார், சாலையில் வந்ததையொட்டி ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியம் அருகே முதல்வர் வாகனம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பதற்றம் அடைந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்த முயன்றனர். இதில், நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.