திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ கூறுகையில், மதிமுக வேட்பாளராக திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். பம்பரம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறினார். இதேபோல, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கே.சுப்பராயனும், நாகை தொகுதியில் வை.செல்வராஜு ம் வேட்பாளர்களாக அந்த கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.