தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து புறப்படும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் பயணிகளை தரையிறக்கிய பின்னர் மீண்டும் 7.45 மணிக்கு, 55 பயணிகளுடன சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் மோசமான வானிலை நிலவியதால் மீண்டும் திருச்சிக்கே வந்து தரை இறங்கியது. இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை நோக்கி சென்ற விமானம் சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதேபோல இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 10-15 மணி, நண்பகல் 12 -20 மணி, மாலை 4-40 மணி உள்ளிட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.