Rock Fort Times
Online News

கேரள உயர்நீதிமன்ற தலையீட்டால் சபரிமலையில் நனவாகிறது மாஸ்டர் பிளான்…!

கேரள உயர்நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பின்னர் 317 கோடி ரூபாய் செலவிலான மாஸ்டர் பிளான் திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும். சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக 2006-ல் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. பம்பை ஹில்டாப் கணபதி கோவில் பாலம் – 32 கோடி; மாளிகை புரத்திலிருந்து சந்திரன் ரோடுக்கு பக்தர்கள் திருப்பிச் செல்ல பாலம் 40 கோடி; புதிய பிரசாத மண்டபம், மேல் சாந்தி மடங்கள், கோவில் தெரு மற்றும் அபிவிருத்தி ஆகியவை 98 கோடி; நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் பக்தர்கள் தங்கு மையம், குடிநீர் வசதி 145 கோடி; சன்னிதானம் அன்னதான மண்டபம், பக்தர்கள் தங்கும் கட்டிடங்களில் தீயணைப்பு வசதிகள் 4 கோடி, இப்படி பல்வேறு திட்டங்கள் இந்த பிளானில் இடம் பெற்றுள்ளது. 2006 -ல் இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. இதை செயல்படுத்த 2009-ல் கேரள உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் உயர் அதிகாரி கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தேவசம்போர்டு மற்றும் வனத்துறை இடையிலான நிலப்பிரச்சனை காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர் கமிஷன நியமித்து, நிலத்தை அளக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வருவாய்துறை- வனத்துறை – தேவசம்போர்டு இணைந்து நிலஅளவீடு செய்து எல்லைகள் நடப்பட்டதால் நிலம் சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, 18 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சபரிமலை  ” மாஸ்டர் பிளான் “திட்டம் இந்த சீசனுக்கு பிறகு தொடங்கும் என்று தேவசம் போர்டு கூறியுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்