திருச்சியில் ஆடுகளை திருடி ஆட்டோவில் கடத்திய டிரைவர்-சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார்…! ( வீடியோ இணைப்பு )
திருச்சி மாநகரம் உறையூர் நாச்சியார் கோவில் பகுதியில் ஆடுகள் அடிக்கடி திருட்டு போயின. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசி டிவிகளில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அந்த ஆட்டோ பதிவெண்ணை கொண்டு விசாரித்த போது அதே பதிவெண் கொண்ட ஆட்டோ அப்பகுதிக்கு மீண்டும் வந்தது. உடனே உஷாரான அப்பகுதி மக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர்.
அதிலிருந்த நபர்கள் தப்பி சென்ற நிலையில் ஆட்டோ டிரைவர் யோகேஸ்வரனை மடக்கிப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் உறையூர் காவிரி நகரை சேர்ந்தவர் என்பதும், நாச்சியார் கோவில் பகுதியில் ஆடுகளை திருடி வந்ததும் தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.