Rock Fort Times
Online News

திருச்சி மண்டலத்தில் 84 கடைகளுக்கு பூட்டு: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை? பட்டியல் வெளியிட்ட தமிழக அரசு..!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மதுகடைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்கு மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அரசுக்கு அதிக அளவில் வருமானம் தருவதில் டாஸ்மாக்கும் ஒன்று. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க.ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழகத்தில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ், ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக அரசு தற்போது மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை வடக்கு – 13
மத்திய சென்னை – 9
சென்னை தெற்கு – 9
காஞ்சிபுரம் வடக்கு – 10
காஞ்சிபுரம் தெற்கு – 8
திருவள்ளுவர் கிழக்கு – 27
திருவள்ளுவர் மேற்கு – 6
கோயம்புத்தூர் வடக்கு – 48
கோயம்புத்தூர் தெற்கு – 23
கரூர் – 8
ஈரோடு – 42
திருப்பூர் – 31

மண்டலம் வாரியாக, 

சென்னை மண்டலம் – 82
கோயம்புத்தூர் மண்டலம் – 179
சேலம் மண்டலம் – 82
திருச்சி மண்டலம் – 84
மதுரை மண்டலம் – 290
மொத்தம் – 717 கடைகள் மூடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்