திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் டிக்கியில் 90 கிலோ பிரண்ட்ஸ் பாக்கெட்டுகள், 28 கிலோ கூல் லிப்ஸ் மற்றும் 75 கிலோ விமல், 15 கிலோ வி1 புகையிலை என தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த உத்தம்சிங் (வயது 29) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் . மேலும், இந்த வழக்கில் பூரான் சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.