நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் மற்றும் பேச்சாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் அவர் தனது கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், முன்னாள் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி மற்றும் திமுக அரசை தரக்குறைவாக விமர்சித்து பாட்டு பாடினார். அந்த வீடியோனது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் திருச்சி, திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் அருண் காளிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகனை, திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் அவரது தனிப்படையினர் சாட்டை துரைமுருகனை கைது செய்த நிலையில் அவரை அங்கிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து சுப்ரமணியபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல் , அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், எஸ்சி, எஸ்டி ஆக்ட் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments are closed.