Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 19-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களில் நாளை(18-07-2024) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மண்டலம்-1 தேவதானம், மண்டலம்-2 விறகுப்பேட்டை
புதியது, சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, சுந்தராஜ நகர்,காஜாமலை, மண்டலம்-3 அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர் , மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மைவீதி, நூலக பகுதி, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்ஐசி பகுதி, சுப்பிரமணியநகர், தென்றல்நகர், இபி காலனி, வி.என். நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே.நகர், ஆனந்தநகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, அன்புநகர், ரெங்காநகர் ஆகிய பகுதிகளில் 19.07.2024 ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது. 20 ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்