தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை ஸொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் செய்தி வெளியானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு திட்டம் இருந்தால் அதனை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று மதுபானம் விற்க தமிழக அரசு திட்டமிடவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபடாது , டெட்ரோ பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை என்றுடாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.