திருச்சி என்.ஐ.டி.ல் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த 5 நாள் பயிலரங்கு தொடங்கியது. இதற்கு என்.ஐ.டி. இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ப்யூா்டூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜு சுந்தர்ராஜன் மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலாஸ்ரீ ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கை துவக்கி வைத்தனர்.
திருச்சி என்.ஐ.டி.கல்லூரி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த பயிலரங்கில் மருத்துவ அணிகலன் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் குறித்தும், எதிர்கால பயன்பாடுகள், தரவு, சேமிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள், புதிய நுணுக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.குறிப்பாக புற்றுநோயாளி வாழ்நாட்களை நீட்டிக்கும் விதமாக நோயாளிகளின் தரவு, மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை மருத்துவ அணிகலன் கருவிகள் மூலம் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் பேராசிரியர்கள் சிவகுமரன், ஸ்ரீ மூர்த்தி, பிருந்தா மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.