Rock Fort Times
Online News

“நீ வாங்கின முட்டைக்கு உன்னை பிரியாணி செய்யாமல் விட்டாங்களே”- அண்ணாமலையை வறுத்தெடுத்த நடிகர் எஸ்.வி.சேகர்…!

தமிழக  பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை தொடர்ந்து பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி என கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தது பாஜக. நேற்று முடிவுகள் வெளியாகின.  ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நயினார் நாகேந்திரன் என நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட பலரும் தோல்வியை சந்தித்துள்ளார்கள்.  இந்த தோல்வி குறித்து நடிகர் எஸ்வி சேகர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலையை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  என் பொறந்த நாளுக்கு எங்கம்மா மசாலா ஆம்லெட் பண்ணி குடுத்தாங்கடா. உனக்கு ஸ்கூல்ல டீச்சர் போட்டாங்களே அந்த முட்டையை வைச்சாடா. நீ வாங்கின முட்டைக்கு உன்னையே பிரியாணி ஆக்காம விட்டாங்களே. முதல்ல இடத்தை காலி பண்ணிட்டு ஓடிடு… என பதிவிட்டுள்ளார்.

திருச்சியில் "திக்... திக்... நிமிடங்கள்” - பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

1 of 874

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்