விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று(13-07-2024) காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டாவது சுற்றில் அன்னியூர் சிவா( திமுக) 12,002 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து, பாமகவின் சி.அன்புமணி 5904 வாக்குகள் பெற்று இரண்டாவதாக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் பொ.அபிநயா வெறும் 849 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளார்.
Comments are closed.