Rock Fort Times
Online News

விவாகரத்து வழக்கு: வருகிற ஜூன்15ம் தேதி விஜய் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…!

நடிகர் விஜய் கடந்த 1998ம் ஆண்டு சங்கீதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். விஜய் – சங்கீதா ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த நிலையில், கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா வழக்குத் தொடுத்த நிலையில், இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும், சங்கீதாவுக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும், சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல வழக்கறிஞர்களும் ஆஜராகினர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அப்போது விஜய் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காணொளிக் காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக் கோரி விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (20.04.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவாகரத்து வழக்கு தொடர்பாக வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஆஜராக நீதிபதி சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்