திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜிக்கு கை மாறிய மாவட்ட செயலாளர் பதவி…* திருச்சி மாவட்ட த.வெ.க.வினர் அதிர்ச்சி!
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக பணியாற்றி வந்தவர் அருள் விஜய். இவருக்கும் திருவெறும்பூர் தொகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருக்கும் நவல்பட்டு விஜிக்கும் இடையே, அதிகார மோதல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் நடைபெற்ற முதல்வர் விஜய் பிறந்தநாள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளரை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் எம்எல்ஏ நவல்பட்டு விஜி குறித்து அக்கட்சி பிரமுகரான எஸ்.ஆர் சபரி என்பவர் விமர்சனம் செய்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத எம்எல்ஏ, எஸ்.ஆர் சபரியை செல்போனில் அழைத்து, காது கூசும் அளவுக்கு கொச்சை கொச்சையான வார்த்தைகளை கூறி வறுத்தெடுத்தார். இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எனவே எம்.எல்.ஏ மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அருள் விஜயின் வசம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவான விஜிக்கு கைமாற்றி உள்ளது. இது, திருச்சி மாவட்ட த.வெ.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.