திருச்சி ,கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 91). இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த நடராஜன் இன்று வீட்டு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னிலையில் வெளியே சென்றிருந்த அவரது மனைவி கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்ததும் நடராஜன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கருமண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Comments are closed.