திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76-வது குடியரசு தின விழா இன்று(26-01-2025) கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு, வண்ண பலூன்களையும், சமாதானத்திற்காக வெண்புறாக்களையும் வானில் பறக்க விட்டார். அதன் பின்னர் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு குடியரசுதின பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து 28 பயனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். குடியரசு தின விழாவில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட காவல்துறையினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.