சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அவர்களை தமிழக முதலமைச்சர் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், திருச்சி உறையூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சே .நீலகண்டன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநகர தலைவர் ஹக்கீம் அலி, செயலாளர் பெர்ஜித் ராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர், தமிழக ஆசிரியர் கூட்டணி நகரத் தலைவர் ஜீவானந்தம், செயலாளர் நிசார்அகமது, பொருளாளர் காட்வின் பிரசன்னா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.