மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை
9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு வரவில்லை. இதன் காரணமாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று இரவு அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நாளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.