Rock Fort Times
Online News

தருமபுர ஆதீனம் குறித்து அவதூறு வழக்கு: மயிலாடுதுறை பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 5 பேர் கைது…!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தர் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டி வருவதாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அகோரம், முப்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை கைது செய்தனர். பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்