திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன். இவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்மையில் சனாதனம் குறித்து பேசிய பேச்சுகளை பாஜக தொழில்நுட்ப பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திரித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார். இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார், பாஜக தேசிய தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது, கலகத்தை ஏற்படுத்துதல், சமூகத்தினர் இடையே பகையை வளர்த்தல், ஒற்றுமையைக் குலைத்தல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அமைதியை கெடுத்தல், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.