Rock Fort Times
Online News

ரூ.4 கோடி சிக்கிய வழக்கில் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு…!

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுதொடர்பாக  3 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர். இதனை  நைனார் நாகேந்திரன் மறுத்தார். இருந்தாலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நைனார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இது ஒருபுறம் இருக்க  நைனார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் , நைனார் நாகேந்திரன் தொடர்புடைய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கில் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமானவரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்