Rock Fort Times
Online News

கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகர்…!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். கடலூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலை 5 மணி அளவில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட அவர் திடீரென  கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.  இதுகுறித்து துரை ராமலிங்கம் கூறுகையில், நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது விரலை துண்டித்து கொண்டதாக தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்