கண்களை காக்க வந்தாச்சு காண்டூரா லேசிக் டெக்னாலஜி- திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண் மருத்துவமனையில் அறிமுகம்…!
தமிழகத்தில் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம் கண் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. ஆனாலும், திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு ஏதாவது கண் சார்ந்த பிரச்சனை என்றால், அனைவரும் பரிந்துரைப்பது ஜோசப் கண் மருத்துவமனையைதான். அந்தளவிற்கு தனது தன்னிகரற்ற சேவையாலும், தரமான மருத்துவத்தாலும் உயர்ந்து நிற்கிறது இம்மருத்துவமனை, 1936ல் டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் என்பவரால் அனைவருக்கும் தரமான கண் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை இன்று கண் மருத்துவத்திற்கான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 30 சிறப்பு மருத்துவர்களின் துணையுடன் இதுவரை 10 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.திருச்சியில் தேசிய தர நிர்ணய சான்றிதழ் பெற்ற முதல் கண் மருத்துவமனை என்ற பெருமை ஜோசப் கண் மருத்துவமனையையே சேரும். திருச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகரமாக 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஜோசப் கண் மருத்துவமனை தற்போது பார்வை குறைபாடுகளை நுட்பமாக கையாளும் விதத்தில், “காண்டூரா லேசிக்” என்னும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை திருச்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.
தற்போது சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலரும் பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஆகியவற்றின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்ய கண்ணாடிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், சிலருக்கு அதனால் கண்சோர்வு, தலைவலி உள்ளிட்டவை ஏற்படுகிறது. இன்னும் சிலரோ கண்ணாடி அணிவதை அசௌகரியமாக உணர்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்த காண்டூரா லேசிக் டெக்னாலஜி அமையும். ஏற்கெனவே கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை லேசிக் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்வதன் மூலம் கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம். இருந்தாலும், மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் வளர வளர மக்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் எளிமையும் புதுமையையும் புகுத்தமுடியும். அந்த வகையில் காண்டூரா லேசிக் டெக்னாலஜி என்பது பல சிறப்பம்சங்களை கொண்டது. உதாரணமாக இந்த காண்டூரா லேசிக் டெக்னாலஜி மூலம் அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும். பார்வைத்திறனை மேம்படுத்த முடியும். பக்கவிளைவுகளை குறைக்க முடியும். இரவு நேரத்தில் ஏற்படும் கண் கூச்சத்தை குறைத்து பார்வைத்திறனை மேம்படுத்த முடியும். உதாரணமாக கண் கருவிழியில் உள்ள சுமார் 22,000க்கு மேற்பட்ட புள்ளிகளை உன்னிப்பாக, இந்த காண்டூரா லேசிக் வரைபடமாக்குகிறது. கார்னியாவின் விரிவான வரைபடத்தை உருவாக்குவதன் மூலம் கான்டூரா மிகவும் நுட்பமான குறைபாடுகளைக் கூட கண்டறிந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமான பார்வையை சரிசெய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் சிக்கலான பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த 22,000 மேற்பட்ட புள்ளிகளை ஸ்கேன் செய்து ஆய்வு செய்வதன்மூலம் குறைபாடுகள் மிக நேர்த்தியாக சரி செய்யப்பட முடியும். குறிப்பாக கண்ணில் சிலருக்கு சில முறையற்ற பிறழ்வுகள் கண் கருவிழியில் இருக்கும். அவற்றை இந்த காண்டூரா டெக்னாலஜி மூலம் தெளிவாக கண்டுகொள்ள முடியும். இதன்மூலம் கருவிழியின் ஒழுங்கற்ற தன்மையை சரி செய்ய முடியும்.காண்டூரா அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் கண் பார்வை திறனை அதிகப்படுத்த முடியும்.வழக்கமான கிட்ட பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பார்வை குறைபாடுகளுக்கு என்னதான் காண்டாக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகள் அணிந்து கொண்டாலும் அவற்றை விட மேம்பட்ட பார்வை திறனை இந்த காண்டுரா லேசிக் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பெற முடியும். இதன்முலம் இனி வாழ்நாளில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது. மேற்கண்ட தகவல்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.பிரதீபா, துணை இயக்குனர் டாக்டர் அகிலன் அருண்குமார், டாக்டர் பிரக்யா பார்மர், லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷயா, டாக்டர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.