நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் திருச்சி-துவாக்குடி இடையே அணுகு சாலை அமைப்பேன்- அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி…!
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதிகளில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமையில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். திருவெறும்பூர் பனையக்குறிச்சியில் தொடங்கிய பிரசாரம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம், கூத்தைப்பார் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி, திருவெறும்பூர், காட்டூர், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் இரவு வரை நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
சி.விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருச்சி தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்பியுமான ப.குமார் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, எனக்கு ஆதரவு கொடுத்து எப்படி வெற்றி பெற செய்தீர்களோ அதேபோல, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தம்பி ப. கருப்பையாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அதிமுக.வேட்பாளர்
ப.கருப்பையா பேசுகையில், உங்கள் சகோதரனாக உங்களிடம் வாக்கு கேட்கிறேன் எனக்கு வாக்களித்து செங்கோட்டைக்கு அனுப்பி வையுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுப்பேன். மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன்.திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு (சர்வீஸ்) சாலை பணியை முதல் பணியாக செய்து முடிப்பேன் என வாக்குறுதி அளித்து வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், கூத்தைப்பார் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், திருவெறும்பூர் பகுதி அவைத் தலைவர் முருகானந்தம், செயலாளர் பாஸ்கர் (எ)கோபால்ராஜ், வட்டச் செயலாளர்கள் ரோஷன், அபிமன்யு மற்றும் வேங்கூர் சாம்பு, தங்கமணி, ஆர்ட்டிஸ்ட் தேவா, நவல்பட்டு பாலமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.