திருச்சி மேலசிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் சரவணன் (37). இவர் திருச்சி கோட்டை சஞ்சீவிநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில், டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திமுகவின் தீவிர ஆதரவாளரான இவர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக பணியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.