Rock Fort Times
Online News

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.30 குறைவு- ரூ.1,930க்கு விற்பனை…!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் , வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனடிப்படையில், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை இன்று (01-04-2024)ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் வணிக சிலிண்டர் விலை தற்போது ரூ.1,930 க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை ரூ.36 அதிகரித்திருந்த நிலையில், இன்று ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்